நெடுந்தீவு கால்நடை பண்ணையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கால்நடை வைத்திய அலுவலகத்தில் கால்நடைப் பண்ணைகளை இதுவரையும் பதிவு செய்யாத பண்ணையாளர்கள் எதிர்வரும் 30.12.2023 ஆம் திகதிக்கு முன்னர் கால்நடை வைத்திய அலுவலகத்தின் கீழ் பதிவு செய்து உரிய சான்றிதழை பெற்றுக் கொள்ளுமாறு நெடுந்தீவு கால்நடை வைத்தியர் அறிவித்துள்ளார்.

கால்நடைத் திணைக்கள அறிவுறுத்தல்களிற்கு இணங்க பதிவு செய்யப்பட்ட பண்ணையாளர்களின் கால்நடைகளுக்கு மட்டுமே எதிர்வரும் காலங்களில் கால்நடை வைத்திய சேவை, தடுப்பு மருந்து வழங்கல், ஆலோசனை வழங்கல் மற்றும் நலத் திட்டங்கள் போன்றவை வழங்கப்படும் என்பதனையும் தெரிவித்துள்ளார்.

Share this Article