நெடுந்தீவு கல்விக்கோட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கல்விக் கோட்டத்தின் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் நேற்று (ஏப்ரல் 2) வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு தூய யுவானியார் ஆலய முன்றலில் நடைபெற்றது.

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் ஏற்பாட்டிலும் பங்குத்தந்தை அருட்பணி வசந்தன் அடிகளாரின் நெறிப்படுத்தலிலும் இவை பகிர்ந்தளிக்கப்பட்டன.

இதற்கு பங்களிப்பை வழங்கிய உள்ளூர் மற்றும் புலம்பெயர் உறவுகளை நன்றியோடு நினைந்து அவர்தம் நலனுக்காக பிரார்திப்பதாகவும் ஊரின் பெருமையை உயர்த்துபவர்களாகவும் அனைவரது எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றும் மாணவர் சமூகமாக மிளிரவேண்டுமெனவும் பங்குத்தந்தை அருட்பணி வசந்தன் நிகழ்வில் தெரிவித்தார்.

Share this Article