தூய பற்றிமா அன்னை ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற முதியோர் தினம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் முதியோர் தினமானது தூய பற்றிமா அன்னை ஆலயத்தில் கடந்த 30 ஆம் திகதி கொண்டாடப்பட்டது.

பங்குத்தந்தை ஜோன் கனீசியஸ் அடிகளாரின் நெறிப்படுத்தலில் ஞாயிறு முதல் திருப்பலியானது முதியோருக்காக விசேடமாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

80 இற்கும் அதிகமான முதியோர் இவ்வழிபாட்டில் கலந்துகொண்டதுடன் வழிபாடுகளையும் சிறப்புற ஒழுங்குபடுத்தியிருந்தனர்.

மேலும் முதியோரின் நலனை கருத்திற்கொண்டு இரண்டாவது திருப்பலி புனித சவேரியார் ஆலயத்தில் அருட்தந்தை சோபன் றூபஸ் அடிகளாரால் ஒப்புக்கொடுக்கப்பட்டு முதியோர் நலனுக்காக விசேடமாக மன்றாடப்பட்டது.

திருப்பலிகளின் நிறைவில் முதியோர் ஒன்றுகூடலிலும் இவர்கள் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article