நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்புனால் 5 ஆண்டு அபிவிருத்தி செயற்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கான கள ஆய்வுப் பணிகள் நெடுந்தீவின் 01 முதல் 06 வரையான கிராமசேவையாளர் பிரிவுகளில் கடந்த 09,10 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.
நெடுந்தீவின் சகல துறைகளிலும் நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்தியை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தும் வகையில் இந்த கள ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தக் கள ஆய்வின் போது யாழ் பல்கலைக்கழக புவியியல் துறையின் பிராந்திய அபிவிருத்திப் பிரிவு விரிவுரையாளர்கள், மாணவர்கள், நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராம சேவையாளர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் நிர்வாக மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் நெடுந்தீவின் அனைத்து அமைப்புக்களுடனும் இணைந்து இக் கள ஆய்வு நடாத்தப்பட்டுள்ளது.