நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பால் தொழில் முயற்சிக்கு வாய்ப்புக்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவில் மோட்டார் வாகனம், தொலைபேசி, படகு உள், வெளி இணைப்பு இயந்திரம் பழுதுபார்க்கும் தொழில் முயற்சியாளர்களுக்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

நெடுந்தீவில் உள்ள பல வாகன உரிமையாளர்கள் தமது வாகனங்களை பழுதுபார்த்தல், தொலைபேசிப் பாவனையாளர்கள் அவற்றைப் பழுதுபார்த்தல், படகு இயந்திரங்களை பழுதுபார்தல் போன்ற விடயங்களில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் அவற்றை யாழ் நகர் எடுத்துச்சென்று பழுதுபார்க்க வேண்டிய நிலை காணப்படுவதால் உள்ளூரில் இவற்றிற்கான தொழில் வாய்ப்புக்களை உடனடியாக ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பு தீர்மானித்துள்ளது.

எனவே அத்துறைகளில் தகுதியானவர்கள் இருப்பின் அவர்களுக்கு தேவையான கருவிகளையும் உபகரணங்களையும் வழங்கி ஊரில் இச்சேவைகளை வழங்க தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஏற்கனவே இத்துறைகளில் தேர்ச்சியுடையவர்கள் நெடுந்தீவு ஊரும் உறவும் அலுவலகத்தில் பெயர் விபரங்களை பதிவு செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு-  077 840 0534

Share this Article