நெடுந்தீவில் மறைக்கல்வி மாணவர்களால் நடாத்தப்பட்ட கலைவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தேசிய மறைக்கல்வி வாரத்தின் இறுதித் தினத்தை முன்னிட்டு மறைக்கல்வி மாணவர்களால் நடாத்தப்பட்ட கலைவிழா – 2023 நிகழ்வுகள் அண்மையில் தூய யுவானியார் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

நெடுந்தீவு மறையாசிரியர் அமையத்தின் தலைவி அமலோற்பவதாஸ் மேரி மெக்டலின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அருட்தந்தை சோபன் றூபஸ் அடிகளாரும் சிறப்பு விருந்தினர்களாக பதில் பங்குத்தந்தை அருட்பணி ஜோண் கனீசியஸ் அடிகளார், திருக்குடும்ப கன்னியர்மட முதல்வர் அருட்சகோதரி லுமினா போல்ராஜ் மற்றும் நெடுந்தீவு றோ. க. மகளீர் கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி நிரஞ்சினி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் மறைப்பாடசாலைகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவில் மாணவர்களின் நடனங்கள், நாடகங்கள் அபிநய பாடல்கள் மற்றும் நாட்டுக்கூத்து என்பன நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டு அரங்கத்தை அலங்கரித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article