நெடுந்தீவில் மட்டுமே காணப்படுகின்ற Indian Courser எனும் பறவையானதுமிகவும் அரிதான,ஆபத்தின் விளிம்பில் காணப்படுகின்றது என சி.சி.எச்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் Indian Courser பறவையை பாதுகாக்கும் நோக்கில்சி.சி.எச் நிறுவன இயற்கை ஊக்குவிப்பு கழகம், பிரதேச செயலகம் நெடுந்தீவு, வட மாகாண சுற்றுலா பணியகம், பிரதேச சபை நெடுந்தீவு ஆகியன இணைந்துDialog நிறுவனத்தின் பங்களிப்புடன் நெடுந்தீவில் விழிப்புணர்வுசெயற்பாடுகளை அண்மையில் முன்னெடுத்திருந்தது.
மாணவர்களுக்கும், சிவில் சமூக உறுப்பினர்களுக்கும் இப் பறவை தொடர்பானவிழிப்புணர்வுகளையும், இப் பறவை தொடர்பான காட்சிபடுத்தல்களும்நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் வைத்து முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை குறித்த பறவையினத்தினை பாதுகாத்தல் தொடர்பான விழிப்புணர்வு பதாதைகள் நெடுந்தீவில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
சி.சி.எச் நிறுவனம் 2010 ம் ஆண்டு தொடக்கம் கொழும்பு பல்கலைக்கழகஇலங்கை களப் பறவையியல் குழுவுடன் இணைந்து 14 வருட காலமாகஇயற்கை ஊக்குவிப்பு கழகத்தினூடாக இயற்கைக்கான பலமுன்னெடுப்புக்களை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.