நெடுந்தீவில் நடைபெறவுள்ள நடமாடும் மருத்துவ முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவக் குழாம் தீவகப் பிரதேசங்களில் நடமாடும் மருத்துவ சேவையை முன்னெடுக்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

முதற்கட்டமாக நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை மருத்துவமுகாம் நடைபெறவுள்ளது.

இதில் யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், துறைசார் வைத்திய அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த மருத்துவமுகாமில் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டியவர்களை இனங்காணும் பரிசோதனைகளும் இடம்பெறவுள்ளன.

நெடுந்தீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மேற்படி மருத்துவமுகாமில் பங்குபற்றிப் பயன்பெற வேண்டும் என்று யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share this Article