நெடுந்தீவில் சுய தொழில் முயற்சியை ஊக்குவிக்க உற்பத்தி சார் பயிற்சிநெறி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவுப் பிரதேசத்தில் உள்ள பெண்கள் மத்தியில் சுய தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பெண்களுக்கு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் சவர்க்காரம் மற்றும் சலவைத்தூள் சார்ந்த உற்பத்தி சார் பயிற்சிநெறி நேற்றுமுன்தினம்(மார்ச் 25) நெடுந்தீவுப் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இடம்பெற்ற குறித்த தொழில் பயிற்சியில் நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி, இலங்கை கைத்தொழில் சபையின் மன்னார் மாவட்ட உதவி பணிப்பாளர் ஜே.எம்.ஏ.லெம்பேட, மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணியாளர்கள் , தீவக பெண்கள் வலையமைப்பின் பிரதிநிதிகள் உள்ளடங்களாக தெரிவு செய்யப்பட்ட பெண்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது சவர்க்காரம் மற்றும் சலவைத்தூள் உற்பத்தி சார் பயிற்சி வழங்க்கபட்டதோடு இறுதியில் பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டது.

பயிற்சியாளர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட சுய தொழில் உற்பத்தி பொருட்கள் வருகை தந்த பிரமுகர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

Share this Article