நெடுந்தீவில் கொல்லப்பட்ட இருவரின் அஸ்தி கடலுடன் சங்கமம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

22.04.2023 அன்று நெடுந்தீவு துறைமுகப் பகுதியிலுள்ள வீட்டில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்ட வேலாயுதம்பிள்ளை நாகரத்தினம் மற்றும் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்த கனகரத்தினம் பூரணம் ஆகியோரின் அந்தியேட்டிக் கிரியைகள் இன்று(ஒக்ரோபர் 25) காலை கீரிமலை புனித தீர்த்தக்கரையில் இடம்பெற்றது.

அவர்களின் அஸ்தி கீரிமலை கடலுடன் சங்கமமானது. இவ் ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் குடும்ப உறுப்பினர்கள் , உறவினர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் நால்வர் மற்றும் இரு ஆண் உறவுகள் என ஆறு பேர் நெடுந்தீவு பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை உண்டாக்கியமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Share this Article