நெடுந்தீவில் கரையொதுங்கிய சடலம் யாழ் போதனாவில் ஒப்படைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு கிழக்கு குயின்ரவர் அமைந்துள்ள கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய ஆணின் சடலம் இன்று(ஒக்ரோபர் 3) மதியம் நெடுந்தீவில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு பொலிஸாரால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நேற்று நெடுந்தீவு குயின்ரவர் கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கிய நிலையில் காணப்பட்டதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து கிராம அலுவலர் , பொலிஸார் மற்றும் கடற்படையினர் சடலத்தை குறித்த பகுதியிலேயே பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதேவேளை இன்று காலை திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் தடயவியல் பொலிஸார் சடலம் கரையொதுங்கிய பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.

இதன்போது திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தை அடையாளம் காணும் நடவடிக்கைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப உத்தரவிட்டதன் அடிப்படையில் நெடுந்தீவு பிரதேச சபையின் சுகாதார ஊழியரகளின் ஒத்துழைப்புடன் சடலம் பொதி செய்யப்பட்டு இன்று மதியம் நெடுந்தீவு பொலிஸாரின் பாதுகாப்பில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Share this Article