நெடுந்தீவு பிரதேசத்தில் உள்ள குதிரைகள் மற்றும் கால்நடைகளுக்கான குடிநீர் இல்லாத நிலை காணப்படுவ தாகவும் இதனால் நீண்ட தூரம் குடிநீருக்கலைந்து இறக்கின்ற நிலமை காணப்படுவதாகவும் பிரதேச பொது அமைப்பு களால் சுட்டிக்காட்டப்பட் டுள்ளது.
நெடுந்தீவு பிரதேசத்தின் அடையாளமாக விளங்கும் குதிரைகள் மற்றும் கால்நடை களுக்கான கேணிகளில் நீர் வற்றிக் காணப்படுவதுடன் குறித்த பிரதேசங்களில் உள்ள கேணிகள் துப்புரவு செய்யப் படாமலும் கானப்படுகின்றன.
இவ்வாறான நிலையில் குதி ரைகள் மற்றும் கால்நடைகள் தண்ணீர் தேடி அலைந்து திரிவதுடன் உயிரிழக்கும் நிலைமை காணப்படுவதா கவும் பிரதேச பொது அமைப் புகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதாவது பிரதேசத்தில் உள்ள கேணிகள் நீண்ட காலம் தூர்வாரப் படாமலும் துப்பரவு செய்யப்படாமலும் கானப் படுவதுடன் கேணிகளில் தற்போது இருக்கின்ற நீரன்: உப்புச்செறிவு அதிக அளவில் காணப்படுவதனால் அவற்றை உட்கொள்ளும் மிருகங்கள் உயிரிழந்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏற்கனவே குதிரைகளுக்கு நீர் வினியோகம் செய்வ தற்குரிய சகல வசதிகள் இருந்தும் அவை இதுவரை செய்யப்படவில்லை என்றும் பிரதேச அமைப்புகள் சுட்டிக் காட்டப்பட்டிருந்தன.
குறிப்பாக இந்த விடயம் உட னடியாக கவனத்தில் கொள்ளப் பட்டு எதிர்வரும் நாட்களில் கேணிகள் ஊடாக கால்நடை கள் மற்றும் குதிரைகளுக்கான நீரை வழங்குவதற்கு நடவ டிக்கை எடுக்கப்படும் என்று நெடுந்தீவு பிரதேச செயலாள ரால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி தினக்குரல்