நெடுந்தீவில் இரு வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவுப் பிரதேச செயலக பிரிவில் 2022 ஆம் ஆண்டு சமுர்த்தி செளபாக்கியா வீட்டுத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இரு வீடுகள் திறந்துவைக்கப்பட்டு பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இத்திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்கு ரூபா 6 இலட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வு நெடுந்தீவு ஜே/05 கிராம அலுவலர் பிரிவில் இடம்பெற்றது. இதில் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் F.C.சத்தியசோதி அவர்கள் கலந்துகொண்டு வீடுகளை திறந்து வைத்து பயனாளிகளிடம் உத்தியாகபூர்வமாக கையளித்தார்.

இந்த நிகழ்வு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் இ.ராஜ்பவன் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் கோ.பாமினி பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உதியோகத்தர் சி.வனஜா ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Share this Article