நிலைமை மோசமடைவதற்குள் விரைந்து நடவடிக்கை எடுக்கவும்..

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை குறித்து அவசர பாராளுமன்ற விவாதம் ஒன்றை நடத்துமாறு எதிர்க்கட்சியின் அரசியல் கட்சிகள், சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

சபாநாயகருக்கும் எதிர்க்கட்சியின் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் இன்று (22/05) பிற்பகல் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இதன்போது அவர்கள் சபாநாயகரிடம் இந்த முன்மொழிவை முன்வைத்துள்ளதுடன், இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது X தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

“ரூபாய் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. எங்களிடம் தெளிவான பதில்களோ அல்லது திட்டங்களோ இல்லை. இன்று ஏனைய கட்சித் தலைவர்களுடன் இணைந்து சபாநாயகரை சந்தித்து, நிலவும் நெருக்கடி குறித்து அவசர பாராளுமன்ற விவாதத்தைக் கோரினோம். நிலைமை மோசமடைவதற்கு முன்னர் மக்களுக்கு நேர்மையான மற்றும் உடனடி நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.” என எதிர்க்கட்சித் தலைவர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்

Share this Article