நாளை கடும் வெப்பம் – எச்சரிக்கை

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நாளை (22/04) பகல் வேளையில் பல மாகாணங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பத்தின் அளவு ‘கவனம் செலுத்த வேண்டிய’ மட்டத்தில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு மேலதிகமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share this Article
Leave a comment