நாரந்தனை றோ. க. மகா வித்தியாலயத்திற்கான பேரூந்து சேவை ஆரம்பம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஊர்காவற்றுறை –நாரந்தனை றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயத்திற்கான இ.போ.சபேருந்து  சேவை நேற்று (ஏப். 30) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

குறித்த பாடசாலை சமூகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம்முன்வைத்த  கோரிக்கைக்கு அமைவாக இ.போ.ச பேருந்து  சேவைஉத்தியோகபூர்வமாக இன்று மதியம் 1.45 மணியளவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்களின் போக்குவரத்து வசதியினை மிகவும்எளிதாக்கி பாடசாலைக்கு அண்மித்து பேருந்தின் மூலம் இறங்கி ஆசிரியர்கள்தமது கடமையைத் திறம்பட ஆற்றவும், மாணவர்கள் உரிய நேரத்திற்கு பாடசாலைசமூகமளிக்கவும், இலகுவாகச் இச்சேவையை யாழ்ப்பாணத்திலிருந்து காலை6.45 மணிக்கும், மதியம் 1.25 மணிக்குமான இரு சேவைகள் இடம்பெறுவதற்குஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article