நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினால் செயற்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் நல்வாழ்வு நம் கையில் எனும் விவசாய செயற் திட்டத்தின், 2024 ஆம் ஆண்டுக்கான ஆரம்ப நிகழ்வு இன்றையதினம் (செப். 12) ஊரும் உறவும் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
வெங்காயச் செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு விதை வெங்காயச் செய்கை தொடர்பில் மாகாண விவசாய திணைக்களத்துடன் இணைந்து ஊரும்உறவும் நிறுவனத்தில் இன்று விளக்கமளிக்கும் நிகழ்வும் வெங்காய விதை வழங்கலும் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை வீட்டுமுறை விவசாய நடவடிக்கையில் பொதி முறையில் மிளகாய் செய்கையினை ஊக்குவிக்கும் வகையில் முதற் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 10 பயனாளிகளுக்கு பொதியிடப்பட்ட மிளகாய் செடிகள் விரைவில் வழங்கப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் விவசாய போதனாசிரியர், ஊரும் உறவும் நிறுவனத்தினர், மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.