நயினாதீவு – குறிகட்டுவான் சேவைக்கான பாதைபடகு கடலில் மூழ்கியது !!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நயினாதீவு  குறிகட்டுவானுக்குமிடையில் சேவையில் ஈடுபட்ட பாதை படகு நேற்று (மே 12) இரவு வேளை கடலில் மூழ்கியது.

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இப் பாதை படகு நயினாதீவு – குறிகட்டுவான்  இடையில் சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாகபழுதடைந்து  சேவையில் ஈடுபட முடியாமல் நயினாதீவு  துறைமுகத்தில்   தரித்துவிடப்பட்டிருந்த  நிலையில் இன்று வீசிய கடும் காற்றின் வேகத்தில் கடலில்மூழ்கியது.

அண்மையில் இப் பாதைபடகு திருத்தப்பட்டு சீரான சேவையினை வழங்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட உள்ளதைக் NPP இன் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article