நயினாதீவில் புலம்பெயர் உறவுகளால் பாரிய வீதி அபிவிருத்தி !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நயினாதீவு தில்லை வெளி ஸ்ரீ பிடாரிஅம்பாள் ஆலய வீதி தார் வீதியாக , நாவலடி வீதியுடன் இணைவதற்கான  ஆரம்ப அடிக்கல் நாட்டும் நிகழ்வு  நேற்றையதினம் ( ஜூன்22) இடம்பெற்றது.

நயினாதீவைச்  சேர்ந்த புலம் பெயர் உறவுகளின் பெரும் முயற்சியால் மற்றும் நிதி  பங்களிப்புடன் இவ் வீதி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தில்லை வெளி ஸ்ரீ பிடாரி அம்பிகை ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

Share this Article