நயினாதீவில் தொடரும் மின் வெட்டினால் சிரமங்களுக்குள்ளாகும் மக்கள்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
Screenshot

நயினாதீவில் கடந்த சில நாட்களாக மின்சாரம் சீராக வழங்கப்படாத நிலையில்நிறுவனங்கள் மற்றும் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

தினமும் காலை 6.00 மணி தொடக்கம் 8.30 வரையும் மாலை 4.00 மணி தொடக்கம் 6.00 மணி வரை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். அத்துடன் நயினை நாகபூசணி அம்மன் ஆலய திருவிழா நாளை ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நயினாதீவிலுள்ள இரு மின் பிறப்பாக்கிகளில் ஒன்று பழுதடைந்துள்ளமையே இந்நிலைக்கு காரணம் என மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விரைந்து நடவடிக்கை எடுத்து நயினாதீவுக்கான சீரான மின்விநியோகம் இடம்பெற உரியவர்கள் ஆவன செய்யவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this Article