தேசிய அடையாள அட்டை இல்லாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முக்கியஅறிவிப்பு!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தேசிய அடையாள அட்டை இல்லாத 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் , பிறப்புச்சான்றிதழ் இல்லாத காரணத்தால் இதுவரை பெற முடியவில்லை எனின் அதனைபெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தேசிய அடையாளஅட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி திகதி எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

விண்ணபிப்பதற்கான இறுதி திகதி கடந்த மாதம் 31 ஆம் திகதி எனஅறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் பிரதேச செயலாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை அதனை நீடித்துள்ளதாக, ஆட்பதிவு திணைக்களம்தெரிவித்துள்ளது.

Share this Article