தீவகத்தின் பெருமையை உயர்த்தும் இளம் கால்பந்து வீரர்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

50 ஆண்டுகளுக்கும் மேலான கால்பந்து பாரம்பரியத்தைக் கொண்ட தீவகத்தின் அல்லைப்பிட்டி மண்ணைச் சேர்ந்த 16 வயதுடைய தேவகுமார் சாருஜன், இலங்கையின் 17 வயதுக்குட்பட்ட (U17) தேசிய கால்பந்து அணிக்குத் தெரிவு செய்யப்பட்டு தீவகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த சாருஜன், அப்பகுதியிலிருந்து தேசிய கால்பந்து அணிக்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் நவம்பர் 08ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை லாவோஸில் நடைபெறவுள்ள ஆசிய 17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்துத் தொடரில் இலங்கை தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி சாருஜன் களமிறங்கவுள்ளார்.

நீண்டகால கால்பந்து பாரம்பரியத்தைக் கொண்ட அல்லைப்பிட்டி மண்ணிலிருந்து உருவாகியுள்ள இளம் வீரரின் இந்தச் சாதனை, தீவக மக்களிடையே மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Share this Article
Leave a comment