By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: தமிழ் அரசியல் கைதிகள் மூவர் விடுதலை!
Share
Notification
Latest News
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
இலங்கைச் செய்தி
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!
இலங்கைச் செய்தி
செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!
யாழ்ப்பாணம்
யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!
யாழ்ப்பாணம்
இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > தமிழ் அரசியல் கைதிகள் மூவர் விடுதலை!
இலங்கைச் செய்தி

தமிழ் அரசியல் கைதிகள் மூவர் விடுதலை!

Last updated: 2023/04/03 at 10:06 PM
Published April 3, 2023 245 Views
Share
1 Min Read
SHARE

2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 14 வருடங்களாக சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த தமிழர்கள் மூவர், வவுனியா மேல் நீதிமன்றத்தால் இன்று (ஏப்ரல் 3) விடுதலை செய்யப்பட்டனர்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் இருந்த யாழ் வேலணையை சேர்ந்த இ. திருவருள், யாழ் கரவட்டியை சேர்ந்த ம. சுலக்சன், முள்ளியவளையை சேர்ந்த க. தர்சன் ஆகிய மூவருக்கும் எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவந்தது.

அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூப்பிக்கப்படாத நிலையில், குறித்து மூவரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் விடுவித்து, அவர்களை விடுதலை செய்தார்.

இது தொடர்பாக குறித்த மூன்று அரசியல் கைதிகள் தொடர்பில் மன்றில் ஆஜராகி வழக்கு விசாரணைகளை முன்னெடுத்த சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து விளக்கமறியலிலும், தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டிருந்த மேற்படி மூவரும் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிராக சதித் திட்டம் தீட்டிய குற்றம் இவர்களுக்கு எதிராக சாட்டப்பட்டிருந்தது. இவர்கள் ஏற்கெனவே வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலம் செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்மானித்தது. அதனைத் தொடர்ந்து சுயாதீன சாட்சிகள் இவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டன.

அந்த சாட்சியங்கள் இவர்களது குற்றத்தை நிரூப்பதற்கு நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூப்பிக்கப்படவில்லை. இதன் காரணமான அனைத்து குற்றங்களிலும் இருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

மிக நீண்டகாலம் இருந்த அரசியல் கைதிகளின் வழக்காக இது காணப்படுகின்றது. இவர்களது விடுதலை எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது எனத் தெரிவித்தார்.

விடுதலை செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றம் முன்பாக வருகை தந்திருந்த தமது குடும்பத்தினருடனும், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் அவர்களுடனும் கட்டியணைந்து தமது மகிழ்ச்சியையும், சந்தோசத்தையும் வெளிப்படுத்தியதுடன் தமது விடுதலைக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

You Might Also Like

க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!

போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

Anarkali April 3, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article “கூடி வாழ்வோம்”நாடக நூல் வெளியீட்டு விழா இன்று!
Next Article லிட்ரோ சமையல் எரிவாயு விலை ஆயிரம் ரூபாவால் குறைப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!
செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!
யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!

You Might Also Like

இலங்கைச் செய்தி

க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!

June 29, 2025
இலங்கைச் செய்தி

போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

June 29, 2025
இலங்கைச் செய்தி

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

June 28, 2025
இலங்கைச் செய்தி

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

June 28, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

June 27, 2025
இலங்கைச் செய்தி

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?