உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க விரும்பும் அரசஊழியர்களின் விண்ணப்பங்கள் மார்ச் 03 ஆம் திகதி முதல் 12ஆம் திகதிநள்ளிரவு 12.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படும் தபால்களில் ஏற்படக்கூடியகாலதாமதங்களையும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு விடுக்கப்பட்டகோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு தபால் மூல வாக்களிப்புக்கானவிண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் காலம் எதிர்வரும் 17ஆம் திகதி நள்ளிரவு12.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த காலதாமதங்களை தவிர்ப்பதற்கு தபால் மூல வாக்களிப்புக்கானவிண்ணப்பங்களை ஒவ்வொரு மாவட்ட வாரியாக வேறு பிரித்து வெவ்வேறு கடிதஉறைகளில் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு நேரில் சென்று ஒப்படைப்பதுமிகவும் உகந்தது எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.