டிப்பர் சில்லுக்குள் சிக்குண்டு ஒன்றரை வயது குழந்தை பலி!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கிளிநொச்சி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட  அம்பாள்குளம் பகுதியில் ஒன்றரைவயதுடைய பெண் குழந்தை ஒன்று  டிப்பர் வாகன சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளது

இச் சம்பவம் இன்று (ஏப்ரல்18)  மாலை இடம்பெற்றுள்ளது. தனது வீட்டில் இருந்த  டிப்பர் வாகனத்தை தந்தை செலுத்திய போதே  அதன்சில்லுக்குள் சிக்குண்டு குழந்தை பலியாகியுள்ளது.

சம்பவ இடத்தை சென்று பார்வையிட்ட கிளிநொச்சி மாவட்ட பதில் நீதிவான் எஸ.சிவபாலசுப்ரமணியம் உடற்கூற்று விசாரணைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார்முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article