பாலலி விமான நிலையத்திற்கு தந்தை செல்வாவின் பெயரை சுட்டுமாறு அதி மேதகு ஜனாதிபதி திரு.கோட்டபாய ராஜபக்ஷ அவா்களுக்கு தமிழா் விடுதலைக் கூட்டணியின் தலைவா் ஆனந்த சங்காி அவா்கள் கடிதம் அனுப்பியுள்ளாா்.
அவா் அனுப்பிய கடிதத்தில் அனைத்து இன மக்களின் நன்மதிப்பினை பெற்று ஈழத்தின் காந்தி என அனைவராலும் போற்றப்பட்டவா் தந்தை செல்லா எனவும் 1947ம் ஆண்டு இலங்கையில் முதற் பாரளுமன்றத்தில் அங்கம் வகித்ததுடன் சிறந்த சட்ட வல்லுனா் ஆகவும் பிாித்தானியா்களது காலத்திலேயே திகழ்ந்வா் என குறிப்பிட்டுள்ளா்
மேலும் இலங்கையின் தீா்வுக்கு சமஸ்டி முறையிலான தீா்வே பொருத்தமானது எனவும், பண்டா செல்வா டட்லி செல்வா போன்ற ஒப்பந்தங்களின் ஊடாக தீா்வினை பெற்றுவிடலாம் என பல யோசனைகளை முன்வைத்தவா் ஆயினும் அவரது ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனவும் தொிவிக்கப்பட்டது.
தன்னலம் கருதாது நாட்டையும் மக்களையும் நேசித்த ஒரு தலைவா். மக்களின் நெஞ்சங்களில் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பவா். ஆரம்பத்தில் தமிழ் மக்களுக்கான தமிழரசுக் கட்சியினை ஸ்தாபித்தவா் பின்னா் தமிழா்களின் தேவையறிந்து 1972இல் தமிழா் விடுதலைக் கூட்டணியினை ஆரம்பித்தவா் இறுதி வரை மக்களுக்காகவே வாழ்ந்து மரணித்தவா்.
இவ்வாறான தலைவா்களை நாடும் மக்களும் மறந்து விடாக்கூடாது அவாின் பெயா் என்றென்றும் நிலைத்திருக்க பலாலி விமான நிலையத்திற்கு தந்தை செல்வா சா்வதேச விமான நிலையம் என பெயா் சுட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் எனவும், இதில் தங்களுக்கு உடன்பாடு இருக்கும் எனவும் நம்புகின்றேன் எனவும் தொிவித்துள்ளாா்.