சிறுவர்களிற்கான இலவச மருத்துவ முகாம் வேலணையில்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தீவக ஒளி சமூக சேவை நிலையமும் சிறகுகள் அமைப்பும் இணைந்து நடாத்தும்சிறுவர்களிற்கான இலவச மருத்துவ முகாம் வேலணையில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை (ஏப்ரல்19) அன்று காலை 9.00 மணி முதல்  மதியம் 12.00 மணிவரை வேலணை சரஸ்வதி மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

முன்பள்ளி சிறுவர்கள் மற்றும் சிறுவர்களிற்கான சுகாதார  விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாமில் பொது மருத்துவம்,பற்சிகிச்சை,     ஊட்டச்சத்து போன்ற விடயங்களும் இடம்பெறவுள்ளதுடன் சிறுவர்களிற்கு பரிசுகளும்காத்திருக்கின்றதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Share this Article