நெடுந்தீவு சுப்பிரமணிய வித்தியாலய வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் – 2025 கடந்த செவ்வாய்கிழமை (மார்ச் 11) மதியம் 2.30 மணிமுதல் வித்தியாலய மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
வித்தியாலய முதல்வர் த.தயாகரன் தலைமையில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வின் பிரதம விருந்தினராக நெடுந்தீவு பல. நோ. கூ. சங்க தலைவர் எ. அருந்தவசீலன் அவர்களும் சிறப்பு விருந்தினராக நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவன நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் மு. அமிர்தமந்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இப்போட்டிநிகழ்வில் அழைக்கப்பட்ட விருந்தினர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் , நலன்விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்தருந்தமை குறிப்பிடத்தக்கது.