யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசஇன்றையதினம் (ஜூன் 11) நெடுந்தீவு பிரதேசத்திற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவிருந்த நிலையில் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.
நயினாதீவு நாகவிகாரையில் வழிபாடுகளினை மேற்கொண்ட பின்னர் நெடுந்தீவுக்கான விஜயம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த நிலையில் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
பாதுகாப்புக்கென அனுப்பப்பட்ட படையினர் மற்றும் உறுப்பினர்கள் பயணிகள் படகான குமுதினியில் நெடுந்தீவுக்கு செனரறிருந்த நிலையில் எதிர்க் கட்சித் தலைவர் கடற்படை படகுமூலம் நெடுந்தீவுக்கு செல்ல ஏற்பாடாகியிருந்த நிலையிலேயே பயணம் இரத்தாகியுள்ளது.
இன்றையதினம் நெடுந்தீவுக்கான விஜயத்தின்போது நெடுந்தீவு மகாவித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் போட் மற்றும் 05 கணினிகள் என்பவற்றை வழங்குவதுடன் ஸ்மார்ட் வகுப்பறையினையும் திறந்து வைக்க ஏற்பாடாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இந் நிகழ்வுகள் பிறிதொரு தினத்தில் இடம்பெறும் என ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.