நாளை நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் ஸ்மார்ட் வகுப்பறை திறக்கவுள்ள சஜித் பிரேமதாச!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாளையதினம் (ஜூன் 11) நெடுந்தீவு பிரதேசத்திற்கான உத்தியோகபூர்வ  விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது ஊர்காவற்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் குருபரன் மதன்ராஜ் தலைமையில்  இடம்பெறும் நிகழ்வில் சஜித் பிரேமதாச அவர்கள் நெடுந்தீவு மகாவித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் போட் மற்றும் 05 கணினிகள் என்பவற்றை வழங்குவதுடன் ஸ்மார்ட் வகுப்பறையினையும் திறந்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 09) தொடக்கம் எதிர்வரும் வியாழக்கிழமை வரை (ஜூன் 13) யாழ்ப்பாணதேர்தல் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பித்தக்கதாகும்.

Share this Article