2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரி 83% மாணவிகள் சித்தியடைந்து நெடுந்தீவு கல்விக் கோட்டத்தில் முன்னிலையாகியுள்ளனர்.
நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகளின்படி 83% சித்திபெற்றுள்ளதுடன் கல்லூரியின் சிறந்த முதல் மூன்று பெறுபேறாக 6A C 2S இனை செல்வி சகாய டொனேஸ் மேரி டீனுஜா , செல்வி S.மேரிசானு – 3A 2B 3C S செல்வி K.கிருதர்ஷினி – 3A B 2C 3S ஆகியோர் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்கள் பெறுபேறுகளின்படி 68% சித்திபெற்றுள்ளதுடன் சிறந்த பெறுபேறாக 3A 2B 2C 2S இனை செல்வன் தோமஸ் அமலமெதுன் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய மாணவர்கள் பரீட்சையின் பெறுபேறுகளின்படி 50% சித்திபெற்றுள்ளதுடன் கல்லூரியின் சிறந்த பெறுபேறாக 3A B 2C 3S இனை செல்வி ரட்சகா சயந்தன் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
