கொழும்பு மரதனோட்டப் போட்டிக்கான பதிவுகள் ஆரம்பம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு ஏற்பாடு செய்துள்ள கொழும்பு மரதனோட்டப் போட்டிக்கான பதிவுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

கொழும்பு மரதனோட்டப் போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.

போட்டியில் கலந்து கொள்ள எதிர்பார்த்துள்ள விளையாட்டு வீரர்கள் செப்டெம்பர் முதலாம் திகதிக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறான விளையாட்டு வீரர்கள் QR குறியீடு மூலம் பதிவுகளை மேற்கொள்ள முடிவதுடன்www.Colombomarathon.lk என்ற இணையளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாகவும் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

விளையாட்டு

கொழும்பு மரதனோட்டப் போட்டித் தொடரில் பூரண மரதன் ஓட்டம், அரை மரதன் ஓட்டம், 10 கிலோ மீற்றர் ஓட்டப் போட்டி, 5 கிலோ மீற்றர் ஓட்டப் போட்டி மற்றும் சிறுவர்களுக்கென 1 – 2 கிலோ மீற்றர் ஓட்டப் போட்டிகளும் உள்ளடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article