குமுதினி படகின் இயந்திரப் பகுதியை சீர்செய்ய நெடுந்தீவு மக்கள் கோரிக்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு குறிகட்டுவான் இடையிலான பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட குமுதினி படகானது கடந்த பல வாரங்களாக சேவையில் ஈடுபடாமல் நெடுந்தீவு துறைமுக பகுதியில் தரித்து விடப்பட்டுள்ளது.

குமுதினி படகின் இயந்திரப் பகுதியில் உள்ள டீசல் பம்ப் திருத்த வேலை அல்லது மாற்றம் செய்ய வேண்டி இருப்பதினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதனை மேற்கொண்டால் படகு சேவையினை ஈடுபடுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்ற போதும் இதுவரைக்கும் எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் இருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

பெரும் நிதி செலவில் படகுக்கான வெளி கட்டுமான திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் இயந்திரப் பகுதியை பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல் தொடர்பான எந்த விதமான செயற்பாடுகளும் இவ் வேளையில் மேற்கொள்ளப்படாமையினால் படகு கட்டுமான வேலைகள் முடிவடைந்து சேவையில் ஈடுபடுகின்ற போது இயந்திரம் அடிக்கடி பழுதாகுகின்ற நிலைமை காணப்பட்டது.

எனவே இந்நிலைமைகளை சீர் செய்து நெடுந்தீவு மக்களின் சீரான போக்குவரத்துக்கு ஆவன செய்ய வேண்டும் என நெடுந்தீவு மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Share this Article