யாழ். கீரிமலைப் பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகளை உடனடியாக மீள அள்ள வேண்டுமென வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் சாம்பசிவம் சுதர்சன் உத்தரவிட்டுள்ளார்.
வலிகாமம் வடக்குப் பிரதேச சபை உறுப்பினர்களின் மாதாந்தக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை (17.09) புறக்கணிக்கப்பட்டதைத் தொடர்ந்து வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாம்பசிவம் சுதர்சன், மத்திய சுற்றாடல் அதிகார சபையினர், வலிகாமம் தெற்குப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆகியோர் வலிகாமம் வடக்குப் பிரதேச சபையினருடன் இணைந்து இன்று கீரிமலை குப்பை மேட்டுக்குக் கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டனர். இதன்போதே வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் சுதர்சன் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.