இன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 400 பேருக்கு Covid-19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. வட மாகாணத்தைச் சேர்ந்த 2 பேருக்கும் ஏனைய பிரதேசத்தைச் சேர்ந்த 13 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றைய பரிசோதனையில் கடந்த 21ஆம் திகதி கொழும்பில் இருந்து வீடு திரும்பிய நிலையில் 25ஆம் திகதி தொடக்கம் சுய தனிமைப்படுத்தல் இல் இருக்கின்ற காரைநகர் சேர்ந்த நபர் ஒருவருக்கும் கிளிநொச்சியில் நீர் விற்பனை நிலையத்தில் கடமையாற்றிய பாரவூர்தி மூலம் நீரைக் கொண்டு வந்த சாரதி ஒருவர் தனிமைப்படுத்தளில் இருந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதேவேளை முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த 8 பேர் மற்றும் பெரியகட்டு வவுனியா தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்த 5 பேர் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளார்கள்.