கிளிநொச்சியில் விபத்து ஒருவா் மரணம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கிளிநொச்சி ஏ-9 வீதியின் கந்தசுவாமி கோயில் முன்பாக இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ஏ-9 வீதி வழியாக பரந்தன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியால் நடந்து சென்றவரை மோதித் தள்ளியுள்ளது
சம்பவத்தில் வீதியில் பாதசாரியாக பயணித்த நபரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் குறிப்பிடுகின்றனர்.

உயிரிழந்தவர் கிளிநொச்சி விவேகாநந்தாநகர் பகுதியை சேர்ந்த செல்லப்பா சந்திரகுமார் என தெரிவிக்கப்படுகின்றது

இந்நிலையில் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளத
இதேவேளை காயமடைந்த மற்றைய நபர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த கிளிநொச்சி பொலிசார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Share this Article