கிளிநொச்சியில் தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கிளிநொச்சியில் நாளை(28) முதல் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது

இதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் ஒன்பது தடுப்பூசி நிலையங்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ளன,

கிளிநொச்சி மத்திய கல்லூரி, அக்கராயன் மகாவித்தியாலயம், வட்டக்கச்சி மத்திய கல்லூரி, உருத்திரபுரம் வைத்தியசாலை, தர்மபுரம் மத்திய கல்லூரி, முழங்காவில் வைத்தியசாலை,பூநகரி வைத்தியசாலை, வேரவில் வைத்தியசாலை, பளை மத்திய கல்லூரி ஆகிய நிலையங்களில் தடுப்பூசி
ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

எனவே 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள நிலையங்களுக்குச் சென்று தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளவும்.

Share this Article