கிளிநொச்சி தட்டுவான்கொட்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றுக்குள் இன்று (செப். 29) மதியம் ஏற்பட்டகுண்டு வெடிப்பு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
பாழடைந்த வீடொன்றை புனரமைக்கச் சென்ற இருவர் வேலையைச் செய்துகொண்டிருந்தபோது, வீட்டில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில்காயமடைந்துள்ளனர்.
வெடிப்பு சம்பவத்தின் போது பலத்த காயமடைந்த இருவரும் கிளிநொச்சிவைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர்.