கிளிநொச்சி ஏ9 வீதியில் பரந்தன் சந்திக்கு அண்மையில் இன்று(ஓகஸ்ட் 29) அதிகாலை சுமார் 5.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில்ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதோடு, மற்றுமொருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது..
யாழ்ப்பாணத்திலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த அரச பேரூந்து பரந்தன் அரச விதை உற்பத்தி நிலையத்திற்கு முன்பாக உள்ள தரிப்பிடத்தில் நிறுத்திய போது பின்னால் வந்த டிப்பர் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து பேரூந்துடன் மோதி விபத்துக்குள்ளானது, இதே வேளை டிப்பருக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேககட்டுப்பாட்டை இழந்து அதனுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடதிலேயேபலியானதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட வேளை உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.