Wednesday, December 7, 2022

கிளிநொச்சியில்மேலும் மேலும் ஐவருக்கு கொரோனா

Must Read

இன்று யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 71 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.

கிளிநொச்சியில் ஐவருக்கும் கடற்படை தனிமைப்படுத்தல் முகாமை சேர்ந்த ஏழு பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய பரிசோதனையில் கிளிநொச்சி
தொண்டமான்நகரத்தில் ( A 9 வீதியில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கும் கிளிநொச்சி தொலைத்தொடர்பு கோபுரத்திற்கும் இடைப்பட்ட பகுதி )தண்ணீர் வியாபாரத்தில் ஈடுபடும் ஒரே விற்பனை நிலையத்தை சேர்ந்த 3 பேர்.

மேற்படி விற்பனை நிலையத்தின் அருகில் இருக்கின்ற இன்னும் ஒரு விற்பனை நிலையத்தில் தொழில் புரியும் ஒருவர்.

அருகிலுள்ள விற்பனை நிலையத்தில் கடமை புரிந்து கடந்த இரு நாட்களுக்கு முன்னர் தொற்று உறுதி செய்யப்பட்டவரின் மருமகனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

*யாழ்ப்பாணம் கடற்படை தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

(இன்று போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை. நாளை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்)

……….

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img