கிளிநொச்சியின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தவிசாளர், உப தவிசாளர் நியமனம்..!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்றுஉள்ளூராட்சி மன்றங்களிலும்  பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுள்ளஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஆட்சியமைக்கவுள்ள நிலையில், அந்த மூன்றுசபைகளுக்குமான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு நேற்றுமுன்தினம்கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையில் நடைபெற்றுள்ளது.

மூன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ளஉறுப்பினர்களுக்கும், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை நிர்வாகஉறுப்பினர்களுக்குமிடையே நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இந்தத் தெரிவுகள் இறுதிசெய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய கரைச்சி பிரதேச சபையின் தவிசாளராக அருணாசலம்வேழமாலிகிதன் அவர்களும் உப தவிசாளராக  புஸ்பநாதன் சிவகுமார்அவர்களும்,

பூநகரி பிரதேச சபையின் தவிசாளராக சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன்அவர்களும் உப தவிசாளராக திருமதி.குணலக்சுமி குலவீரசிங்கம் அவர்களும்

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சுப்பிரமணியம் சுரேன்அவர்களும், உப தவிசாளராக சிவகுரு செல்வராசா

அவர்களும்தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தெரிவுகள் தொடர்பிலான மாவட்டக்கிளையின் எழுத்துமூல தீர்மானம்,  கிளிநொச்சி மாவட்டக் கிளைத்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமானசிவஞானம் சிறீதரன் அவர்களால் கட்சியின் பதில் தலைவரிடம் நேரடியாககையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article