கிராம சேவையாளர் விபத்தில் பலி

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பூநகரி கிராம சேவையாளர் விபத்தில் பலி; மனைவி ஆபத்தான நிலையில் !

பூநகரி பிரதேச செயலகத்தில் பணிபுரியும் கிராம சேவையாளர் இன்று மாலை 6-00 மணியளவில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தார் அவருடன் பயணம் செய்த மனைவி படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சாவகச்சேரி பகுதிக்கு சென்று விட்டு தமது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது பூநகரி ஜெயபுரம் பகுதியில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளார்

விபத்து சம்பவம் எவ்வாறு இடம் பெற்றது என்ற விபரம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை சம்பவத்தில் பூநகரி பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் நகுலேஸ்வரன் [வயது 48 ] என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிராம சேவையாளர் இவ்வாறுபரிதாபமாக உயிரிழந்தார்

இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Share this Article