காரைநகரில் வெடிபொருள் அகழ்வு பணி!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

காரைநகர் பகுதியில் காணி ஒன்றில் வெடிபொருட்கள் காணப்படுவதாககிடைத்த தகவலையடுத்து இன்று அங்கு அகழ்வுப் பணிகள்முன்னெடுக்கப்படவுள்ளன.

காரைநகர், மடத்துக்கரை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இருந்து 50 மீற்றர்கள்தொலைவில் உள்ள கடற்படை முகாம் அமைந்திருந்த காணி ஒன்றில்வெடிபொருட்கள் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்குஅகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

குறித்த அகழ்வுப் பணியை நேற்றையதினம் மேற்கொள்வதற்கு ஊர்காவற்துறைநீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், ஜே.சி.பி இயந்திரம் இல்லாதகாரணத்தால் அது முன்னெடுக்கப்படவில்லை.

மீண்டும் இன்று நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று குறித்த அகழ்வுப் பணிகள்முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரைநகர்பகுதியில் காணி ஒன்றில் வெடிபொருட்கள் காணப்படுவதாக கிடைத்ததகவலையடுத்து இன்று அங்கு அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Share this Article