காணாமல் போன மூவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

முல்லைத்தீவுக்கடலில் நீராடச்சென்று காணாமல் போன மூவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை முல்லைத்தீவு கடலுக்கு நீராட சென்ற நிலையில் குறித்த மூவரும் காணாமல் போயிருந்தனர்.

வவுனியாவைச் சேர்ந்த 26 வயதான இருவரும் 27 வயதுடைய ஒருவருமே இவ்வாறு காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் மீனவர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் குறித்த மூன்று பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்,

மூவரினதும் சடலங்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பிரேதச பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது

Share this Article