கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளமாணவர்களுக்கான அறிவித்தல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குதோற்றவுள்ள மாணவர்களுக்கான, பரீட்சை அனுமதிக்கான அட்டைகள் அடுத்தவாரம் விநியோகிக்கப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்தது.

பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர்கள் ஊடாக அனுமதி அட்டையைபெற்றுக்கொள்ள முடியும் எனவும், தனியார் விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம்அனுப்பி வைக்கப்படும் எனவும் பரீட்சைத் திணைக்களம் இன்று (ஏப்ரல 17) தெரிவித்துள்ளது.

மேலும் சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி முதல் 15ஆம்திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், 4,52,979 பேர் பரீட்சைக்குத்தோற்றவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது

Share this Article