கரைச்சி பிரதேச சபையின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு.!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கரைச்சி பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகள் சபை, தவிசாளர் அருணாசலம்வேழமாலிகிதன் தலைமையில் இன்று பதவியேற்றுக் கொண்டது.

கிளிநொச்சி நகர சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற மதவழிபாடுகளைத்தொடர்ந்து, சர்வமதத் தலைவர்களின் ஆசியுடன், கரைச்சி பிரதேச சபையின்செயலாளர் தங்கபாண்டி ஞானராஜ் தலைமையில் சம்பிரதாயபூர்வ நிகழ்வுகள்இன்று காலை, சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றன.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், கிளிநொச்சி மாவட்டஉள்ளூராட்சி உதவி ஆணையாளர் பரமானந்தம் சத்தியராகவன்,  வடக்கு மாகாணமேனாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, வடக்கு மாகாண சபையின்மேனாள் உறுப்பினர் பசுபதி அரியரத்தினம், பூநகரி பிரதேச சபையின் தவிசாளர்சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கியதுடன், சபையின்தவிசாளராக இன்று பதவியேற்றுக்கொண்ட அருணாசலம் வேழமாலிகிதன்அவர்கள் முதன்மை உரையாற்றியிருந்தார்.

Share this Article