கபடி இறுதி போட்டிக்கு சென் ஜோண்ஸ் இளைஞர் கழகமும், சென் அன்ரனிஸ் இளைஞர் கழகமும் தெரிவு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு பிரதேச இளைஞர் விளையாட்டு விழா நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (ஓகஸ்ட் 19) ஆரம்பமானது.

19.08 2023 சனிக்கிழமை
பி. ப 2.00 மணிக்கு நெடுந்தீவு மகா வித்தியாலய மைதானத்தில் ஆண்களுக்கான கபடி போட்டி இடம்பெற்றது. இதன்போது சென் ஜோண்ஸ் இளைஞர் கழகமும், சென் அன்ரனிஸ் இளைஞர் கழகமும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.

20.08. 2023 ஞாயிறு
காலை 9.00 மணிக்கு ஆண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டி நெடுந்தீவு மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. இதன் இறுதிப்போட்டியில் சென் பற்றிமா இளைஞர் கழகம் 06 : 03 என்ற கோல் அடிப்படையில் சென் அன்ரனிஸ் இளைஞர் கழகத்தை வெற்றிகொண்டு சம்பியனானது.

Share this Article