கனடா செல்ல முயற்சித்த வவுனியா இரட்டை கொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற வவுனியா இரட்டை கொலை வழக்குடன்தொடர்புடைய சந்தேகநபரை மேலும் மூன்று மாத காலம் விளக்கமறியலில்வைக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கின் விசாரணை முடிவடையவில்லை எனக்கூறி சட்டமா அதிபர்சார்பில் அரச சட்டத்தரணி மனுதாக்கல் செய்ததையடுத்தே, இந்த தீர்ப்புவழங்கப்பட்டுள்ளது.

கொலையுடன் தொடர்புடைய ஒரு சந்தேகநபர் சம்பவத்தின் பின்னர் தனதுமனைவி மற்றும் பிள்ளைகளை கனடாவிற்கு அனுப்பி வைத்ததாகவும் பிணைவழங்கப்பட்ட பின்னர் அவரும் கனடாவிற்கு தப்பிச்செல்ல இருப்பதாகவும்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்னும் சில சந்தேகநபர்கள் தலைமறைவாக இருப்பதாகவும்குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கொடூரமான கொலை சம்பவம் பிரதேச மக்களை அச்சமுற செய்ததாகதெரிவித்த நீதிபதி, சந்தேகநபர்களை 30.01.2025 வரையான காலப்பகுதிக்குவிளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Share this Article