கனகராயன்குளத்தில் பெண் ஒருவர் மீது மோதி தப்பிச்சென்ற வாகனம் ,இருவர் கைது!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கனகராயன்குளம் பகுதியில் பெண் ஒருவர் மீது மோதி தப்பிச்சென்ற வாகனம்வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை(செப்.20) மீட்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கனகராயன்குளம் பகுதியை சேர்ந்த குடும்பபெண் ஒருவர் கடந்த செப். 16 இரவுகணவருடன் ஏற்பட்ட முரன்பாட்டை தொடர்ந்து கனகராயன்குளம் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு அளிக்க சென்றுள்ளார்.

இதன்போது A9 வீதியில் வைத்து வாகனம் ஒன்று அவரை மோதியதில்படுகாயமடைந்த அவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்தில் அந்தபகுதியைசேர்ந்த 32 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிறுத்தாமல் அங்கிருந்துதப்பிச்சென்றிருந்ததுடன், இது தொடர்பாக வவுனியா மாவட்ட குற்றத்தடுப்புபொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இதனையடுத்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தையும் அதன் சாரதி,மற்றும்உரிமையாளர் ஆகியோர் விசுவமடு பகுதியில் வைத்து வவுனியா குற்றத்தடுப்புபொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டனர்.

வாகனத்தின் நிறம் உட்பட ஏனைய அமைப்புக்களை மாற்றியமைக்கும் பணியில்அவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

Share this Article