கடலுடன் கலந்தது நெடுந்தீவில் கொலை செய்யப்பட்ட நாகசுந்தரியின் அஸ்தி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு மாவிலித் துறைமுகப்பகுதியில் 22.04.2023 அன்று கொலைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டின் உரிமையாளர் கார்த்திகேசு நாகசுந்தரி அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் இன்று காலை நெடுந்தீவு கிழக்கு புனித தீர்த்தக்கரையில் இடம்பெற்றது.

அன்னாரின் அஸ்தி, படகுவடிவில் அமைக்கப்பட்ட தேரில் ஊர்வலமாக நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் படகு மூலம் எடுத்து செல்லப்பட்டு ஆழ்கடலில் இறக்கி விடப்பட்டது.

இவ் ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் குடும்ப உறுப்பினர்கள் , உறவினர்கள் மற்றும் நெடுந்தீவுப் பகுதி மக்கள் எனப் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் நால்வர் மற்றும் இரு ஆண் உறவுகள் என ஆறு பேர் நெடுந்தீவுப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை உண்டாக்கியமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Share this Article